தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு


தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
x

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை அகற்றப்பட்டது.

சென்னை,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து அயோத்தி நிகழ்ச்சியை காணும் வகையில் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டது.

இதையடுத்து அந்த எல்.இ.டி. திரையை போலீசார் அகற்றினர். அதைபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அயோத்தி நிகழ்ச்சியை காண வைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகளை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி போலீசார் அகற்றினர்.

இதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டன. தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது. திமுக அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. எல்.இ.டி. திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது. இந்து விரோத திமுக அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.


Next Story