மேல்மலையனூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்


மேல்மலையனூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடை பெற்றது.

விழுப்புரம்


மேல்மலையனூர்,

மேல்மலையனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கர் வரவேற்றார். இதில் வருகிற 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, அன்றையதினம் விழுப்புரத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றியத்தில் இருந்து 50 வாகனங்களில் செல்வது, கிராமங்கள் தோறும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் திலிபன், துணை செயலாளர் தனஞ்செழியன், செய்தி தொடர்பாளர் எழில்மாறன், ஒன்றிய துணை செயலாளர் தேவக்குமார், கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி செயலாளர் அலமேலு ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story