குடியரசு தின விழா கொண்டாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
குடியரசு தின விழா
திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் நகர் மன்ற துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆணையர் பிரதான்பாபு, நியமனக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நகராட்சியில் சிறப்பாக பணியாற்றி அலுவலர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த விழாவில் மாரிமுத்து எம்.எல்.ஏ. தேசியக்கொடி ஏற்றி வைத்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மலர்கொடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
மன்னார்குடி
மன்னார்குடி நகராட்சியில் நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.இதில் நகர சபை துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், மேலாளர் மீரான் மன்சூர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் வனிதா,அருள்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பக்கிரிசாமி, மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஆஸ்பத்திரி
மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.இதில் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி தமிழ்நாடு மின் வாரியத்தில் நகர உதவி செயற் பொறியாளர் சா.சம்பத் சஞ்சீவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
வலங்கைமான்
வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தலைவர் சாமி குணசேகரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரித்துவாரமங்கலம், ஆவூர், ஆலங்குடி, கோவிந்தகுடி உள்ளிட்ட வட்டார அளவிலான அனைத்து தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முசாகுதீன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் சிவக்குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முத்துப்பேட்டி போலீஸ் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் . ஒன்றிய குழுக் தலைவர் உமாபிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். விழாவில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு தலா ரூ 50,000 நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஒன்றியக்குழுத் தலைவர் உமாபிரியா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சத்தியேந்திரன், நாகூரான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் மற்றும் முத்துக்குமரன், கொரடாச்சேரி பேரூர் தி.முக செயலாளர் கலைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.