குடியரசு தின விழா கொண்டாட்டம்


குடியரசு தின விழா கொண்டாட்டம்
x

காரைக்குடி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

காரைக்குடி நகராட்சி

குடியரசு தின விழாவையொட்டி காரைக்குடி நகராட்சியில் நகர்மன்ற ஆணையாளர் லட்சுமணன் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தேசிய கொடி ஏற்றினார். கல்லல் யூனியன் அலுவலகத்தில் ஆணையாளர் இளங்கோ முன்னிலையில் யூனியன் சேர்மன் சொர்ணம் அசோகன், சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் முன்னிலையில் யூனியன் சேர்மன் சரண்யா செந்தில்நாதன், பள்ளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் சாந்தி, கானாடுகாத்தான் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலையில், பேரூராட்சி தலைவர் ராதிகா, கோட்டையூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கவிதா முன்னிலையில், பேரூராட்சி தலைவர் சோலை கார்த்தி, கண்டனூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பெலிக்ஸ் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் சங்கீதா, புதுவயல் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் முகமது மீரா ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

குன்றக்குடி திருமடம்

குன்றக்குடி ஆதீன திருமடத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், காரைக்குடி ஆவின் அலுவலகத்தின் சேர்மன் கே.ஆர்.அசோகன், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானி டாக்டர் சிவசண்முகம், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரவி, வித்யாகிரி கல்விக்குழுமங்களில் அதன் தாளாளர் சுவாமிநாதன், செட்டிநாடு பப்ளிக் பள்ளி சேர்மன் குமரேசன், செல்லப்பா வித்யா மந்திர் தாளாளர் சத்தியன், சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி சேர்மன் டாக்டர் சேதுகுமணன், கோவிலூர் மடாலய கல்வி குழுமங்களில் கோவிலூர் ஆதீனம் சீர்வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், புதுவயல் கலைமகள் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தாளாளர் பரமேஸ்வரன், கிட் அண்ட்கிம் என்ஜினீயரிங் கல்லூரி, ராஜ வித்ய் விகாஸ் பள்ளி சேர்மன் அய்யப்பன், எஸ்.ஆர்.கல்வி குழுமங்களில் தாளாளர் சித்திக் முன்னிலையில் வக்கீல் சம்பூர்ணா, நேஷனல் கல்விக்குழுமங்களின் தாளாளர் சையது, யூனிவர்சல் இன்ஸ்டிடியூட் தாளாளர் விஸ்வநாதகோபாலன் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.

அழகப்பா கலைக்கல்லூரி

பொய்யனூர் ஊராட்சியில் அதன் தலைவர் திவ்ய நாதன், அமராவதி ஊராட்சி தலைவர் சுப்பையா, இலுப்பக்குடி ஊராட்சி தலைவர் வைரமுத்து அன்பரசு, அரியக்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா. சூரக்குடி ஊராட்சி தலைவர் என்ஜினீயர் முருகப்பன், சிறுகபட்டி ஊராட்சி தலைவர் கருப்பையா, குன்றக்குடி ஊராட்சி தலைவர் அலமேலுமங்கை, கோவிலூர் ஊராட்சி் தலைவர் சுந்தரி சுப்பிரமணியன், உஞ்சனை ஊராட்சி தலைவர் அருணகீதன், அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வெங்கடேசன், தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிட மணி, சண்முகநாதன் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் மணிகண்டன், கல்லல் ஊராட்சிஅலுவலகத்தில் ஊராட்சி செயலர் அழகுமுத்து முன்னிலையில் ஊராட்சி மன்றத்தலைவர் ராம நாச்சியப்பன் ஆகியோர் தேசியக்கொடியினை ஏற்றினர்.


Next Story