மாவட்டத்தில்குடியரசு தின விழா கொண்டாட்டம்


மாவட்டத்தில்குடியரசு தின விழா கொண்டாட்டம்
x

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி, ஊராட்சி, பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல்

குடியரசு தின விழா

நாமக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி முனுசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரய்யா, கூடுதல் சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், கூடுதல் மகளிர் நீதித்துறை நடுவர் நந்தினி, நாமக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபாகரன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற சட்ட கல்லூரி மாணவிகளுக்கு நீதிபதிகள் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.

அரசு பள்ளி

புதுச்சத்திரம் அருகே உள்ள சர்க்கார் உடுப்பம் ஊராட்சியில் உள்ள முத்தப்புடையாம்பாளையம் அரசு பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி, விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தன்னார்வலர் பன்னீர்செல்வம், கல்வியாளர் மணிகண்டன், மேலாண்மை குழு தலைவி சண்முக பிரியா ஆகியோர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். முடிவில் உதவி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார். இதேபோல் குடியரசு தினத்தையொட்டி நாமக்கல்லில் உள்ள நேதாஜி சிலைக்கு நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது சங்கத்தின் துணைசெயலாளர் கோவிந்தராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பொருளாளர் சதீஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, வக்கீல் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள பிள்ளா நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மகேஸ்வரி தேசிய கொடியேற்றி வைத்தார். விழாவில் துணைத் தலைவர் காவேரி அம்மாள், பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வக்கீல் கண்ணன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், துணை அமைப்பாளர் நித்தியானந்த் மற்றும் முகேஷ், வார்டு செயலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பேரூராட்சி தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் ராசிபுரம் நகராட்சியில் 74-வது குடியரசு தின விழா நடந்தது. விழாவிற்கு நகராட்சி தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தேசிய கொடியேற்றி வைத்தார். நகராட்சி பொறியாளர் கிருபாகரன், கவுன்சிலர்கள், நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, பொதுமக்கள் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், கலந்து கொண்டனர். விழாவில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர் கவிதா சங்கர் மற்றும் ஆணையாளர் அசோக் குமார் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குடியரசு தினத்தையொட்டி தலைமை ஆசிரியர் முத்துசாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். அதைத் தொடர்ந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமிதுரை, அறக்கட்டளை நிர்வாகி சண்முகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி போன்ற பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பரிசு வழங்கி பாராட்டினார். ஊராட்சி மன்ற தலைவர் திலகம் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, நகர பிரமுகர்கள் அக்கியம்பட்டி வரதராஜ், சேந்தமங்கலம் கந்தசாமி, கடல் வீரன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் கதிர்வேல், உதவி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், வெண்டாங்கி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி செந்தில் தலைமையில் தேசிய கொடியேற்றி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் செந்தில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மலர்விழி கிரிஜா, அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் தலைமையில் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சரஸ்வதி கொடியேற்றி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். கண்டிபுதுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயகுமார் கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கலியனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள். ஆனங்கூர் ஊராட்சியில் தலைவர் சிங்காரவேல் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா சார்பு நீதிபதி தீனதயாளன் தலைமையில் நடந்தது. வக்கீல் ஜெயராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார். இதில் வக்கீல் குமரவேல், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.


Next Story