குடியரசு தின விழா கொண்டாட்டம்


குடியரசு தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

கொள்ளிடம்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.விழாவில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பி.டி.ஓ. அருள்மொழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் கொள்ளிடம் மற்றும் புதுப்பட்டினம் போலீஸ் நிலையங்கள், கொள்ளிடம் நீர்வள ஆதாரத்துறை அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்ளிட்ட பல்ேவறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

சீர்காழி

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். மேலாளர் காதர்கான் வரவேற்றார். விழாவில் நகராட்சி ஆணையர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் துணைத் தலைவர் சுப்பராயன், பொறியாளர் சித்ரா, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் அசோகன், துணைத்தலைவர் அன்புச் செழியன், இளநிலை உதவியாளர் பாமா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அர்ச்சனா தேசியக்கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதே போல் சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி மும்தாஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் குடியரசு தின விழா ெகாண்டாடப்பட்டது.

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம்

பொறையாறில் உள்ள தரங்கம்பாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர் பாவலர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ஜெகதீசன் வரவேற்று பேசினார்.

பொறையாறு. டி.பி.எம்.எல்.கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாறு துறை பேராசிரியர் மரிய லாசர் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார். அதனை தொடர்ந்து அவர் தரங்கம்பாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க புதிய கட்டிடம் கட்ட ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். விழாவில் அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. விழாவில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, தரணி மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

பள்ளிவாசலில் குடியரசு விழா

குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி டி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஊர் முத்தவல்லி செல்லப்பா தலைமை தாங்கினார். ஜமாத் நிர்வாகிகள் நஜீமுல்லா, முன்னாள் கவுன்சிலர் ஜெகபர் அலி, வாகித், அமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் ரியாத் அகமது வரவேற்றார்.

குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மதரஸாவில் பயின்று வரும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசினார். இதில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் செந்தில், மரிய ஆரோக்கியராஜ், அசோக்குமார், வார்டு உறுப்பினர்கள் அனிதா சிவதாஸ், கண்ணன், அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாருன் நஈம் பள்ளி இமாம் அப்துர்ரஹ்மான் நன்றி கூறினார்.


Next Story