குடியரசு தின விழா


குடியரசு தின விழா
x

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி தேசிய கொடியை ஏற்றினார். பள்ளி செயலர் காமராஜ், குடியரசு தின விழா உரையாற்றினார். சாரண- சாரணிய மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தின விழா குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மாணவர்கள் உரையாற்றினர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் ராஜன் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சேவியர் செல்வராஜா தேசிய கொடியேற்றினார். துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story