குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய கோரிக்கை
தேன்கனிக்கோட்டையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டிய அதிகாரிகள் பழுதை சரி செய்யாமல் உள்ளனர். இதனால் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story