வறட்சியால் நெற்பயிர்கள் கருகின: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை


வறட்சியால் நெற்பயிர்கள் கருகின: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:47 PM GMT)

வறட்சியால் நெற்பயிர்கள் கருகினயதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி தாலுகாவுக்கு உட்பட்ட சாலைக்கிராமம், சூராணம், இளையான்குடி, தாயமங்கலம், திருவுடையார்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து நிற்கிறது. மேலும் செந்தாலை நோய் தாக்கியும் நெற்பயிர்கள் அழிந்துவிட்டன. நெல் விவசாயம் செய்த விவசாயிகள் உழவு, விதைநெல், களை எடுப்பு, உரம் போன்றவைகளுக்கு கடன் வாங்கி செலவு செய்து விட்டு நிற்கதியாக நிற்கின்றனர். எனவே அரசு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வறட்சியால் பாதித்த பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, தாலுகா செயலாளர் ராஜூ, வருந்தி மாரிமுத்து ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


Next Story