செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்க வேண்டும்-காரைக்குடி தொழில் வணிக கழகம் கோரிக்கை


செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்க வேண்டும்-காரைக்குடி தொழில் வணிக கழகம் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விமான நிலையம்

மத்திய அரசின் புதிய நிதிநிலை அறிவிப்பில் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதில் செட்டிநாடு விமான நிலையமும் இடம் பெற வேண்டும் என காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சாமிதிராவிட மணி கூறுகையில்,

செட்டிநாடு விமான ஓடுதளம் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நல்ல நிலையில் இருந்தும் பல ஆண்டுகளாக பயன்படாமல் உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு இப்பகுதி பயன்படுத்தப்படும் போது அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் திட்டச்செலவு தவிர்க்கப்படும்.

வளர்ச்சி

உதான் திட்டத்தில் இப்பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுமா? என்று கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி நாடாளுமன்றத்தில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியதற்கு இந்திய விமானத்துறை அமைச்சர் ஜோதி ஆதித்ராய் சிந்தியா, இது குறித்து தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தால் பரிசீலிக்கலாம் என்று பதிலளித்துள்ளார். சிவகங்கை எம்.பி.யின் கருத்தையும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செட்டிநாட்டில் விமான நிலையம் அமைப்பது குறித்து தெரிவித்த கருத்துக்களையும் மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் இணைத்து முதல்-அமைச்சரின் பரிந்துரைக்கும், கோரிக்கையாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பகுதி மக்களின் சார்பில் கடிதமாக அனுப்பி உள்ளோம்.

பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மத்திய அரசு செட்டிநாட்டில் விமான நிலையம் அமைத்து இந்த பகுதி வளர்ச்சியடைய உதவிட வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story