கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி


கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி
x

கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள அரசபட்டி, வளையன்குளம், வீரபெருமாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வெயில் உகந்த அம்மன் கோவில் அரசபட்டியில் உள்ளது. இந்து அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட்டு வருகின்றனர். இக்கோவிைல சுற்றிலும் 4 ஏக்கருக்கு மேல் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. கோவில் கும்பாபிஷேகம் செய்து சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால் 3 கிராமங்களை சேர்ந்த மக்களும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு எடுத்தனர். ஆனால் கோவில் பெயரில் நிலம் இல்லாததால் கும்பாபிஷேகம் செய்ய முடியவில்லையாம். இந்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோவில் பெயரில் நிலத்தை மாற்றக்கோரி பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் கோவில் பெயரில் குறைந்தது 50 சென்ட் நிலம் ஏற்றி தர வேண்டும் என கள்ளிக்குடி வட்டாட்சியரிடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் மனு கொடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.


Next Story