கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என நீர்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிவகங்கை

இளையான்குடி

பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து சாலைக்கிராமம் நீர்ப்பாசன கண்மாய் வரை சுமார் 22 கி.மீ. வரத்து கால்வாய் உலக வங்கி நிதி உதவியுடன் புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்துதல் பணிகள் ரூ.22 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சாலைக்கிராமம் நீர்ப்பாசன விவசாயிகள் கூறும் போது, தங்கள் பகுதி வழியாக வரும் கால்வாயில் தூர்வாரும் பணியை முழுமையாக செய்யாமல் சீமை கருவேல மரங்களை மட்டும் அகற்றி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணியை செய்துள்ளதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை பொதுப்பணித்துறை இயக்குனரகம் ஆகியவற்றிற்கு கால்வாய் தூர்வாரும் பணியை முழுமையாக செய்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதோடு கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என நீர்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

1 More update

Next Story