சுகாதார பணிகள் பாதிப்பால் தொற்று நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


சுகாதார பணிகள் பாதிப்பால் தொற்று நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 3:08 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார பணிகள் பாதிப்பால் அந்த பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

சிவகங்கை

திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார பணிகள் பாதிப்பால் அந்த பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

சுகாதார பணிகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர சுகாதார பணிகள் மேற்கொள்வதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- பேரூராட்சி வார்டு பகுதியில் உள்ள சில இடங்களில் சாக்கடை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படுகிறது. இந்த பகுதி மக்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடவடிக்கை வேண்டும்

பேரூராட்சி சார்பில் வீடு, வீடாக டெங்கு கொசுப்புழு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு செய்வதற்காக 20 பெண்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகள் தோறும் சென்று இந்த விழிப்புணர்வை செய்து வந்த நிலையில் அந்த பணியாளர்கள் சிலரை சுழற்சி முறையில் பஸ் நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்திலும், பேரூராட்சி அலுவலக பணியாளர்களுக்கு உதவியாளராகவும் நியமித்துள்ளதால் சுகாதார பணிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. எனவே வார்டு பகுதியில் குப்பைகளை சேகரித்தல், கொசு மருந்து தெளித்தல், தேங்கிய சாக்கடை மற்றும் கழிவுநீரை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story