கலெக்டரின் பெயர்-புகைப்படத்தை பயன்படுத்தி பணம் கேட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் பெயர்-புகைப்படத்தை பயன்படுத்தி பணம் கேட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டரின் புகைப்படத்தை காட்சி படமாக பயன்படுத்தி வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் (பேஸ்புக்) வாயிலாக போலி எண்கள் மற்றும் கணக்குகள் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் பணம் கேட்கும் மோசடி முயற்சிகள் நிகழ்ந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் அரசு அலுவலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி செல்போன் எண்களில் இருந்தோ அல்லது பேஸ்புக் கணக்குகளில் இருந்தோ யாருக்கேனும் பணம் கேட்பது தொடர்பான போலி தகவல்கள் கிடைக்க பெற்றால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். கலெக்டரின் பெயரில் சமூக ஊடகங்களில் வரும் போலியான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தயவு செய்து விழிப்புடன் இருந்து இதுபோன்ற மோசடி கும்பல்களை அடையாளம் கண்டு வெளிச்சத்திற்கு கொண்டு வர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.