கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கான நிலுவைத்தொகையை ரத்து செய்ய கோரிக்கை
கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கான நிலுவைத்தொகையை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், காவல்துறை, வருவாய் துறையை பயன்படுத்தி கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். இலவச செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரைய தொகை என்று கூறி பெருந்தொகையை ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
அரசு கேபிள் நிறுவனம் ஆபரேட்டர்களுக்கு தடையற்ற சிக்னல் வழங்கி, தொழிலுக்கு பாதுகாப்பு தராத நிலையில் நிலுவைத் தொகை என்ற பெயரில் ஆபரேட்டர் மீது சுமத்தியுள்ள நிலுவைத்தொகையை ரத்து செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.