பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். உறுப்பினர் அப்துல் ரஹீம் வரவேற்று பேசினார். செயலாளர் சையத் பாஷா ஜான், ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 4 சதவீதம் அகவிலைபடியை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வட்டாரத்தில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார்.