பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் நலச்சங்கத்தினர்பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் நலச்சங்க கூட்டம் ராஜாராம்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 100 நாளில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட கடந்த 2015 நவம்பர் மாதம் முதல் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்.
மருத்துவகாப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய ஒப்பந்த பலன்களை வழங்கிட வேண்டும். ஓய்வு ஊதிய திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். கோர்ட்டு தடை ஆணையை திரும்ப பெற்று அகவிலைபடியை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் பொருளாளர் அன்சாரி நன்றி கூறினார்.