தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமையில் அமைப்பை சேர்ந்தவர்கள் சங்கர ராமேசுவரர் கோவில் செயல் அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்க வருவார்கள். இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால் பொதுமக்கள் நலன் கருதி, விழா நடைபெறும் அன்று 4 கால பூஜையில் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகம், ஆராதனை சிவன் கோவில் மண்டபத்தின் வளாகத்த்தில் அமர்ந்துள்ள அனைத்து பக்தர்களும் கண்டுகளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். குடிநீர் குழாய்களை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என்று கூறி உள்ளனர்.