தனியார் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் இல்லங்கள்-விடுதிகளை பதிவு செய்ய வேண்டுகோள்


தனியார் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் இல்லங்கள்-விடுதிகளை பதிவு செய்ய வேண்டுகோள்
x

தனியார் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் இல்லங்கள்-விடுதிகளை பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடத்தப்பட்டு வரும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தங்கும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன்படி தங்களது விடுதிகளை பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் இல்லங்கள் பதிவு செய்வதற்கு பதிவு கட்டணமாக ரூ.3 ஆயிரம் District Collector, Ariyalur என்ற பெயரில் வரைவோலை எடுத்து வழங்கப்பட வேண்டும். பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்த அலுவலகத்தை 04329-296239 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பதிவு பெறாமல் நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story