பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க கோரிக்கை


பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jan 2023 12:11 AM IST (Updated: 9 Jan 2023 3:00 PM IST)
t-max-icont-min-icon

பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழும் பகுதியாகும். இப்பகுதியில் முருங்கை, நெல், கம்பு, சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள். குறிப்பாக முருங்கை சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பும் அதிக அளவில் உள்ளது. தற்போது முருங்கை பூ பூக்கும் காலம் தொடங்கியுள்ளது. முருங்கை மரங்களில் அதிக அளவு பூச்சி தாக்குதல் உள்ளது. எனவே முருங்கை மரங்களில் பூ விடாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். குறிப்பாக காய்கறி பயிர்களில் பூச்சி தாக்குதலில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே இது தொடர்பாக விவசாயிகளுக்கு அரசு சார்பில் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story