பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், கடுகூர் ஊராட்சி தலையாரி குடிக்காடு கிராம மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், எங்கள் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இது சம்பந்தமாக பலமுறை அதிகாரியிடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் நலன் காக்க சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story