புதிய ரேஷன் கடை கட்ட கோரிக்கை


புதிய ரேஷன் கடை கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 4:21 PM IST)
t-max-icont-min-icon

புதிய ரேஷன் கடை கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள கொங்கம்பட்டி கிராமத்தில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம் தலைவர் கிங் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழனி கண்ணா, சரவணன் யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவ தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், கொங்கம்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும், அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கோகுல கிருஷ்ணன், சங்கர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story