அரியலூரில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை


அரியலூரில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2023 7:51 PM GMT (Updated: 11 Aug 2023 10:02 AM GMT)

அரியலூரில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் நகரின் செட்டி ஏரிக்கரை இறக்கத்தில் ராவுத்தம்பட்டி செல்லும் சாலை அருகே தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்த முத்து உள்பட 5-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளன. இதையடுத்து, அவர்கள் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்ல சிறுவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே அரியலூரில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story