ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்


ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்
x

ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல் வரவேற்றார். கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அரசிடம் இருந்து பணி வரன்முறை உத்தரவை பெற்றுத்தந்த கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள உதவியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான பணியிடங்களை காலதாமதமின்றி உடனடியாக பதவி உயர்வு முறையில் நிரப்பிட வேண்டும். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் திருட்டை தடுக்க முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஒரே வட்டாரத்தில், அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அலுவலர்களுக்கு பணிமாறுதல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story