குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை


குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
x

குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் அருகே தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சுமார் 570 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் தற்போது சுமார் 30 சதவீத குடியிருப்புகளில் மக்கள் குடியேறி உள்ளனர். இந்நிலையில், இந்த குடியிருப்பை சுற்றி எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமலும், தெரு விளக்குகள் இல்லாமலும் இரவு நேரங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சாலையில் அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது எவ்விதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் தங்களை குடியமர்த்தியதாகவும், முக்கிய சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியாக நடந்து வரக்கூடிய சூழல் உள்ளதாகவும், சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு போக்குவரத்துக்கான வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், குடியிருப்பை சுற்றி மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story