நெல்-சின்ன வெங்காய பயிர்களுக்கு காப்பீடு தொகையை பெற்று தர வேண்டுகோள்
நெல்-சின்ன வெங்காய பயிர்களுக்கு காப்பீடு தொகையை பெற்று தர வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குழு உறுப்பினர்கள் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடைபெறும் சென்னை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மாவட்டத்தில் நெல், சின்ன வெங்காயம் ஆகிய 2 பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்னும் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு காப்பீடு தொகை பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story