மீன்மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகோள்
மீன்மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி மாவட்ட மீன் மொத்த வியாபாரிகள் நலச்சங்கத்தின் 3-வது ஆண்டு கூட்டம் உறையூர் காசிவிளங்கி மீன்மார்க்கெட்டில் நடைபெற்றது. சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சங்க வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உறையூர் காசிவிளங்கி மீன்மார்க்கெட் வளாகத்தில் மின்விளக்கு வசதிகள், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story