எருது முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை


எருது முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
x

எருது முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

எருது முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்துள்ள கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த பீடி தொழிலாளி தவ்லத் என்பவரின் மகன் முஷ்ரப் என்ற வாலிபர் மாடு முட்டி இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ஏழை பீடி தொழிலாளியின் குடும்பத்தை சேர்ந்த இளைஞர் மரணமடைந்துள்ளதால் அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் உள்ளது. எனவே, தமிழ்நாடு அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகையும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் மரணமடைந்த இளைஞர் காவல்துறையினரால் தாக்கியதால் தான் மரணமடைந்தார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. இதனால் கோபமடைந்த சிலர் அப்பகுதியில் காவல்துறையை எதிர்த்துள்ளனர். இதனால் அங்கு அசம்பாவிதம் நடைபெற்றதால் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவன் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க வதந்திகளால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story