சாலையை சீரமைக்க கோரிக்கை


சாலையை சீரமைக்க கோரிக்கை
x

சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள சின்னள்ளிக்குளம் கிராமத்திற்கு போக்குவரத்து கழக பஸ்கள் செல்லாத நிலையில் நீண்ட நாட்களாக மினி பஸ் தான் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்திற்கு விருதுநகர் பாண்டியன் நகரில் இருந்து சின்ன வள்ளி குளம் செல்லும் தார்ச்சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன் பின்பு சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால் இந்த சாலை முற்றிலுமாக சேதமடைந்து மினி பஸ் கூட இயக்கப்பட இயலாத நிலையில் உள்ளது. அதனால் இக்கிராமத்திற்கு செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் இச்சாலையை மீண்டும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story