தூத்துக்குடி அருகே கிராமங்களுக்கு பஸ் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்


தூத்துக்குடி அருகே கிராமங்களுக்கு பஸ் இயக்க கோரி   மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கிராமங்களுக்கு பஸ் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டான், பண்டாரம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ், மினிபஸ் இயக்கப்படுகிறது. இதனை பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நேற்று காலையில் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்காக காத்து இருந்தனர். ஆனால் அரசு பஸ் சரிவர இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீளவிட்டான் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story