கொள்ளிடம் பாலத்தின் வழியாக பஸ்கள் இயக்க கோரிக்கை


கொள்ளிடம் பாலத்தின் வழியாக பஸ்கள் இயக்க கோரிக்கை
x

கொள்ளிடம் பாலத்தின் வழியாக பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி

பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம், துணைச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் கல்லணையில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.முகில், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் லதா உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கும் கல்லணை, கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் வழியாக லாரிகள், கார்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இந்த இவ்வழித்தடந்தில் பஸ் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. ஆகவே, பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும். கல்லணையில் நிலவி வரும் குடிநீர் மற்றும் மின்சார தட்டுப்பாட்டை போக்காத அதிகாரிகளை கண்டித்தும், திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அகரப்பேட்டை வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தியும் ஜூன் மாதம் 9-ந் தேதி கல்லணையில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story