ராணுவ மருத்துவமனை அமைக்க கோரிக்கை


ராணுவ மருத்துவமனை அமைக்க கோரிக்கை
x

அரியலூரில் ராணுவ மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருமானூர் ஒன்றிய தலைவர் கேப்டன் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு ராணுவ கேன்டீன் மற்றும் ராணுவ மருத்துவமனை ஆகியவற்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சங்கத்தை சேர்ந்த அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story