பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை


பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
x

பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே சிவலிங்காபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிவலிங்காபுரம், வலையபட்டி, பெத்லேகம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கோவில் செந்தட்டியாபுரம், நரிக்குளம், வடகரை, மேட்டு வடகரை, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழலகம் இல்லை. ஆதலால் மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவா்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆதலால் மேற்கண்ட பகுதியில் நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story