கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைக்க கோரிக்கை
கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கொங்கம்பட்டியில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம் கிங்கருப்பையா தலைமையில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் சரவணன் யாதவ், பழனி கண்ணா, லலித் கிருஷ்ணன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும். ஆடு வளர்ப்போருக்கு தமிழக அரசு வழங்கும் கால்நடை பராமரிப்பு கடன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட வட்டார அளவில் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஏற்படுத்த வேண்டும். கொங்கம்பட்டியில் இருந்து இளையான்குடி வழியாக பரமக்குடிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும். கொங்கம்பட்டியில் கலையரங்கம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story