கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை


கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 24 Sept 2023 12:30 AM IST (Updated: 24 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவிந்தபேரி பஞ்சாயத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கீழப்பாவூர் ஒன்றியம் குறும்பலாப்பேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் கோவிந்தபேரியில் 6,000 கால்நடைகள் உள்ளன. ஆகவே கால்நடை மருத்துவமனை கேவிந்தபேரி ஊராட்சிக்கு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தார். இதை வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை மருத்துவமனை அமைத்து தருவேன் என்று தெரிவித்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story