கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க கோரிக்கை


கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க கோரிக்கை
x

கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூரில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலுகுட்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பாமாயில் இறக்குமதிக்கு தடை செய்து, தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் வினியோகிக்க கேட்டுக் கொள்வது, கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க வேண்டும், எருமை பால் லிட்டர் ரூ.60-க்கும், பசும்பால் லிட்டர் ரூ.50-க்கும் விற்க வேண்டும் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story