நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டுகோள்


நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டுகோள்
x

பிரதமரின் ஊக்கத்ெதாகை பெறும் விவசாயிகள் நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

பிரதமரின் ஊக்கத்ெதாகை பெறும் விவசாயிகள் நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பாரத பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தங்கள் பெயரில் நில பட்டா உள்ள விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வாங்க 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 9 ஆயிரத்து 827 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை 11 தவணைகள் வரை விவசாயிகள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.

12-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது நிலம் சம்கந்தமான விவரங்கள் நில அளவை எண் மற்றும் நில உரிமையாளர் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே 12-வது தவணை விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆவணங்கள்

எனவே பி.எம்.கிசான் நிதி பெறும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, கணினி பட்டா, ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை விரிவாக்கம் மையத்தை அணுகி பயன் அடையுமாறு ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலெட்சுமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


Related Tags :
Next Story