பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க அனுமதி கேட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க அனுமதி கேட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க அனுமதி கேட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க அனுமதி கேட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மீன்பிடிக்கும் உரிமை

பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த உரிமை கடந்த மாதம் 19-ந் தேதி முடிவடைந்தது. அதனால் மீண்டும் மீன் பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. இந்தநிலையில் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன் பிடிக்கும் உரிமையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் 19-ந் தேதியிலிருந்து ஒரு மாதத்துக்கு ஏற்கனவே மீன் பிடிக்கும் உரிமை பெற்ற தனியார் நிறுவனத்திற்கு உரிமையை நீட்டித்துக் கொடுத்தனர். ஆனால் மீனவர்கள் தனியாருக்கு மீன் பிடிக்க செல்ல மறுத்து விட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மேலும் மீன்வளத் துறையினர் நீதிமன்ற உத்தரவை அரசுக்கு அனுப்பி, அரசு இதழில் வெளிவந்த பிறகு கூட்டுறவு சங்கத்திற்கு மீன்பிடிக்க உரிமை வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் தனியாருக்கு நீட்டிப்பு செய்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மீனவர் சங்கத்தினர் நேற்று காலை 11.30 மணி அளவில் மார்க்கெட் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பவானிசாகர் மண்டல உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். முன்னதாக ஊர்வலமாக வந்து மீனவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story