2,500 கிலோ ரேஷன் கோதுமையை கடத்திய வாலிபர் கைது


2,500 கிலோ ரேஷன் கோதுமையை   கடத்திய வாலிபர் கைது
x
திருப்பூர்

திருப்பூர்,:

தாராபுரம் அருகே 2,500 கிலோ ரேஷன் கோதுமையை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரேஷன் பொருட்கள் கடத்தல்

திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஈரோடு உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் நேற்று தாராபுரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் சத்திரம் சந்திப்பு பகுதியில் நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து இந்த அதிரடி தணிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக கோதுமை இருந்தன. அவற்றை பரிசோதித்தபோது, அது ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் கோதுமை என்பது தெரியவந்தது.

2,500 கிலோ கோதுமை பறிமுதல்

இதைத்தொடர்ந்2,500 கிலோ ரேஷன் கோதுமையை

கடத்திய வாலிபர் கைதுது வேனை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்த ரியாஸ் அகமது (வயது 24) என்பதும், பழனி பகுதியில் ரேஷன் கடையில் இருந்து கோதுமைகளை மொத்தமாக விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து பின்னர் மொத்தமாக கேரளாவுக்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 2 ஆயிரத்து 500 கிலோ கோதுமை, சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியாஸ் அகமதுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். ரியாஸ் அகமதுவுக்கு உதவிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story