ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 36 மாடுகள் மீட்பு
நாமக்கல்
நாமகிரிப்பேட்டை:
ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் மாடுகள் கடத்தப்படுவதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில் போலீசார் மெட்டாலா நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் அதில் 36 மாடுகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியுடன் மாடுகள் மீட்கப்பட்டு, போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் மாடுகளை கடத்த முயன்ற நபர்கள் குறித்து லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story