கொல்லிமலை அடிவாரத்தில் கருவாட்டாற்றில் புதர்கள் அகற்றம்
நாமக்கல்
சேந்தமங்கலம்:
கொல்லிமலை அடிவாரத்தில் கருவாட்டாறு செல்கிறது. கொல்லிமலையில் பெய்யும் மழை கருவாட்டாறு வழியாக சென்று, விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கருவாட்டாற்றில் புதர்கள் அடந்து வளர்ந்து காணப்பட்டது. இதனால் அதன் வழியாக தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் கொல்லிமலையில் மழைப்பொழிவு முற்றிலும் நின்றது. இதனால் கருவாட்டாறு தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் கருவாட்டாற்றில் வளர்ந்திருந்த புதர்கள் நடுக்கோம்பை ஊராட்சி சார்பில் அகற்றப்பட்டன. இதனால் தற்போது கருவாட்டாறு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
Next Story