பள்ளி செல்லாத 3,500 குழந்தைகள் மீட்பு
கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லாத 3,500 மாணவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லாத 3,500 மாணவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி செல்லா குழந்தைகள்
கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,209 அரசு பள்ளிகள் உள் ளன. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 532 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப சூழல், வறுமை, வேலைக்காக இடம் பெயர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் சில குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை உள்ளது. அவர்களை கண்டறிந்து மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் கல்வியியல் பயிற்சி ஆசிரியர்கள், தன்னார்வலர் கள், அதிகாரிகள் குழுவினர் மாதந்தோறும் பள்ளி செல்லா குழந் தைகள், இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து வருகின்றனர். இதன் மூலம் இந்த ஆண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் 3,500 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
3 சிறப்பு குழுக்கள்
கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்காக மாவட்ட அளவிலான குழு கலெக்டர் தலைமை யிலும், வட்டார அளவிலான குழு வட்டார கல்வி அலுவலர் தலைமையிலும், பள்ளி அளவிலான குழு தலைமை ஆசிரியர்க ளின் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.
இந்த குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்து படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்கு எமிஎஸ் என்ற இணையதளம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
3,500 பேர் மீட்பு
15 நாட்களுக்கு மேல் ஒரு மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவரின் வீட்டிற்கு சென்று விசாரிக்கப்படும். படிப்பை தொடர சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோருக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறப்படும்.
இந்த ஆண்டு 600 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்பட 3,500 பள்ளி செல்லா குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களை பள்ளியில் சேர்த்து படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களை சமூகநலத்துறை, தொழிலாளர் நலத்துறை, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.