நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x

விசைப்படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

விசைப்படகு கவிழ்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரடிக்சன் (வயது 40) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காட்டு ராஜா, பழனிவேல், ஜெகன், பழனி முருகன் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் சுமார் 18 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகில் துளை ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்தது. இந்நிலையில் சிறிது நேரத்தில் படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதனால் படகில் இருந்த 4 மீனவர்களும் டீசல் கேனை பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்துள்ளனர்.

4 மீனவர்கள் மீட்பு

அப்போது அருகே மீன்பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அங்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்டு தங்கள் படகில் ஏற்றி கொண்டு கரை திரும்பினர். இதையடுத்து கடலில் மூழ்கிய படகை மீட்க 6 விசைப்படகில் மீனவர்கள் சென்றனர். அவர்கள் படகு மூழ்கிய இடத்தை கண்டுபிடித்து பின்னர் கயிறு மூலம் படகை கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.


Next Story