ஆற்றங்கரையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு


ஆற்றங்கரையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு
x

ஆற்றங்கரையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

தஞ்சாவூர்

சுவாமிமலை அருகே கொத்தங்குடி கிராமத்தில் மண்ணியாற்றங்கரையில் துணி துவைப்பதற்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. பின்னர் அங்கு சென்று பார்த்த போது, பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அந்த குழந்தையை மீட்டு உடனடியாக கொத்தங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீசார் குழந்தையை யாராவது வீசி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story