கிணற்றில் விழுந்த மாடு கயிறுகட்டி மீட்பு


கிணற்றில் விழுந்த மாடு கயிறுகட்டி மீட்பு
x

கிணற்றில் விழுந்த மாட்டினை தீயணைப்பு துறையினர் கயிறுகட்டி மீட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

கிணற்றில் விழுந்த மாட்டினை தீயணைப்பு துறையினர் கயிறுகட்டி மீட்டனர்.

வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் 2 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாடுகளை விவசாய நிலத்தில் கட்டி விட்டு சென்று விட்டார்.

இதில் ஒரு மாடு ஒன்று கயிற்றை அவிழ்த்துக்கொண்டு சென்றதில் விவசாய கிணற்றில் விழுந்தது. மாடு கத்தியதை கேட்ட ஊர் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கிணற்றில் மாடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

உடனே பொதுமக்கள் மாட்டை மீட்க முயற்சி செய்தும் மீட்க முடியவில்லை. இதையடுத்து வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாட்டை கயிற்றை கட்டி ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.


Next Story