பள்ளத்தில் தவறி விழுந்த மான் மீட்பு


பள்ளத்தில் தவறி விழுந்த மான் மீட்பு
x

மங்கலம்பேட்டை அருகே பள்ளத்தில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே எடக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒருவரின் விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய மான் ஒன்று அந்த பள்ளத்தில் தவறி விழுந்தது. இது குறித்த தகவலின்பேரில் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையிலான வீரர்கள் ஸ்ரீரங்கம், முஹம்மது புன்யாமீன், கார்த்திக் ராஜா, சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளத்தில் விழுந்த மானை மீட்டு, விருத்தாசலம் சரக வனக்காப்பாளர் ஜெயவர்த்தனனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த மான் பாதுகாப்பாக காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விடப்பட்டது.



Related Tags :
Next Story