பறக்க முடியாமல் தவித்த பருந்து மீட்பு


பறக்க முடியாமல் தவித்த பருந்து மீட்பு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் பறக்க முடியாமல் தவித்த பருந்து மீட்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை,

கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இருக்கும் ஒரு மரத்தில் இறக்கை மற்றும் கால்களில் கேபிள் ஒயர் சுற்றிய நிலையில் ஒரு பருந்து பறக்க முடியாமல் தவித்தது. இதை பார்த்த அங்கிருந்த போலீசார் இது குறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய சிறப்பு அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் பறக்க முடியாமல் தவித்த அந்த பருந்தை மீட்டனர். பின்னர் அதன் இறக்கை மற்றும் காலில் சிக்கி இருந்த கேபிள் ஒயரை அகற்றினார்கள். இருந்தபோதிலும் அதுவால் தொடர்ந்து பறக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு அதிகாரிகள், அந்த பருந்தை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மீட்கப்பட்ட பருந்து தற்போதுதான் பறக்க தொடங்கி இருக்கிறது. இறக்கையில் ஒயர் சிக்கி இருந்ததால் பறக்க முடியவில்லை. எனவே அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பறக்க விடப்படும் என்றனர்.


Next Story