கிணற்றில் விழுந்த கடமான் மீட்பு


கிணற்றில் விழுந்த கடமான் மீட்பு
x
தினத்தந்தி 30 Aug 2023 2:15 AM IST (Updated: 30 Aug 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோயம்புத்தூர்


ஆனைமலை


ஆனைமலை அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கிணற்றில் தத்தளித்த கடமான்


ஆனைமலை அடுத்த கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குமார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 40 அடி கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மாலை 6 மணிக்கு ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.


இதையடுத்து அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகள் கிணற்றை எட்டி பார்த்தனர். அப்போது கடமான் ஒன்று தத்தளித்துக்கொண்டிருந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கடமான் வழித்தவறி வந்து கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.


உடனடியாக இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.


தீயணைப்பு துறையினர் மீட்டனர்


இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து கடமானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் மின்விளக்கு மற்றும் வலைகளை பயன்படுத்தி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடமானை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.


பின்னர் அந்த கடமானை வனத்துறையினரிடம், தீயணைப்பு படையினர் ஒப்படைத்்தனர். இதனைத்தொடர்ந்து கடமானை வனத்துறையினர் சேத்துமடை வனப்பகுதியில் விட்டனர்.



Next Story