கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பீரங்கிமேடு பகுதியில் சுமார் 30 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அந்த வழியாக சென்ற மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது. இதனை கவனித்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன், பேராவூரணியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அதிகாரி செந்தூர்பாண்டியன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், செருவாவிடுதி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், தென்னங்குடியை சேர்ந்த நீலகண்டன் ஆகியோர் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த மயிலை உயிருடன் மீட்டனர்.







1 More update

Next Story