கிணத்துக்கடவு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் மீட்பு

கிணத்துக்கடவு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் மீட்பு
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் மீட்பு

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியில் தண்ணீர் இல்லாத 80 அடி கிணற்றில் ஒரு ஆண் மயில் தவறிவிழுந்தது. இதுபற்றி அறிந்ததும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சங்கரன் ஆகியோர் தீயணைப்பு வீரர்களுடன் கோதவாடி கிராமத்துக்கு சென்றனர். பின்னர் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பத்திரமாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த மயில் வன பகுதியில் விடப்பட்டது.

Next Story